தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் போராட்டம்

52பார்த்தது
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க 2-வது கட்ட போராட்டம் இன்று உடுமலையில் நடைபெற்றது. தாலுகா அலுவலகம் முன்பு மாநில சங்க முடிவின்படி மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு வட்டதலைவர் கிரி தலைமை வகித்தார். வட்டசெயலாளர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். அதன் தொடர்ச்சியாக முன்னாள் வட்டசெயலாளர் திருமலைசாமி, முன்னாள் வட்டதலைவர் திருமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி பழனிச்சாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இந்த போராட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக வட்ட துணை தலைவர் நன்றி கூறி காத்திருப்பு போராட்டத்தை நிறைவு செய்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி