உடுமலை ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

553பார்த்தது
உடுமலை ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
உடுமலை தில்லை நகரில் உள்ள ரத்தின லிங்கேஸ்வரர் கோயிலில் மாசி மாத பிரதோஷத்தை ஒட்டி இரத்தின லிங்கேஸ்வரர் மற்றும் நந்தியம் பகவானுக்கும் சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் நடந்தது. பிரதோஷ நேரத்தில் நந்தியம்பகவானுக்கு பால், தேன். பஞ்சாமிர்தம். இளநீர். மஞ்சள் விபூதி, போன்ற 16 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ரத்னாம்பிகை சமேத ரத்தின லிங்கேஸ்வரர் கோயில் உட்பிரகாரத்தில்திருவீதி வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானையும் ரத்தினம் லிங்கேஸ்வரனையும் வழிபட்டனர் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி