திருப்பூர் மாவட்டம் பாலப்பம்பட்டி துணை மின் நிலைய பகுதியில் நாளை வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை உடுமலை காந்திநகர், அண்ணாகுடியிருப்பு, நேருவீதி, நகராட்சி அலுவலகம், பார்க், ரயில் நிலையம், போலீஸ் குடியிருப்பு, சந்தை, எஸ். வி. புரம், பாலப்பம்பட்டி, மைவாடி பிரிவு, கண்ணமநாய்க்கனுர், குரல்குட்டை, மடத்துார், மலையாண்டிபட்டிணம், மருள்பட்டி, உரல்பட்டி, சாளரப்பட்டி, பாப்பான்குளம்ஆகிய பகுதியில் மின் விநியோகம் இருக்காது. அப்போது மின்பாதைக்கு அருகில் உள்ள மரங்களின் கிளையை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்