உடுமலையில் திடீர் கனமழையால் பொதுமக்கள் அவதி!

12131பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் இரவு 7 மணியளவில் இடைவிடாமல் மழை பெய்தது. இதனால் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாக்கடைகள் நிரம்பி
மழை நீர் சாலையில் சென்றது. இதற்கிடையில் வணிக நிறுவனங்களில் பணிகள் முடிந்து வீட்டுக்குச் செல்லும் தொழிலாளர்கள் மழையால் கடும் பாதிப்பு அடைந்தனர். மேலும் மழை வெள்ளத்தால் வாகனங்கள் நீரில் மூழ்கின.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி