உடுமலையில் புழுதிப்பறக்கும் சாலையால் மக்கள் அவதி!

80பார்த்தது
உடுமலையில் புழுதிப்பறக்கும் சாலையால் மக்கள் அவதி!
உடுமலையில் இருந்து
திருமூர்த்தி மலைக்கு போடிபட்டி, பள்ளபாளையம், வழியாக மூணார், அமராவதி, திருமூர்த்தி மலை உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் வழியாக நாள்தோறும் பஸ், வாகனம் மற்றும் சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் உடுமலை- திருமூர்த்திமலை சாலையில் அண்ணா நகர் பகுதியில் இருந்து தனியார் பள்ளி வரையில் வாளவாடி இணைப்பு சாலை சந்திக்கும் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டதுடன் உயிரிழப்பும் நிகழ்ந்து வந்தது. இதன் காரணமாக சாலையை அகலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையில் வலுப்பெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையின் 2 ஓரங்களில் இருந்த புளிய மரங்கள் அகற்றப்பட்டது. இதையடுத்து சாலை அகலப்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது கற்களுடன் கூடிய எம். சாண்ட் கலவை கொட்டப்பட்டு சமன் படுத்தப்பட்டு உள்ளது. இதில் வாகனங்கள் செல்லும் போது புகைமண்டலம் உருவாகி வருகிறது. மேலும் சாலையில் சிதறி கிடக்கும் சிறுசிறு கற்கள் விபத்துகள் ஏற்படுத்தும் சூழலை உருவாக்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே அண்ணா நகர் தனியார் பள்ளி இடையிலான பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி