திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இரண்டாவது நாளாக கனமழை பெய்ததால், கடும் வெப்பத்தால் தவித்து வந்த பொதுமக்கள் கடும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால், விவசாயிகளும் விவசாய பணிகளை துவக்கி உள்ளனர்.