திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனை பழையகட்டிடம் தரைத்தளத்தில் செயல்படும் ஆய்வகம்பிரிவில் காலை8மணிக்கு வரவேண்டிய அலுவலர்கள் தற்போது 8. 30ஆகியும் வரவில்லை. ஏராளமான நோயாளிகள் ரத்தப்பரிசோதனைக்கு கொடுப்பதற்கும், ரிசல்ட் வாங்குவதற்கும் காலை 7. 30லிருந்தே நிற்கவும் முடியாமல் நடக்கவும்முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டுள்ளனர். சரியான நேரத்திற்கு வரவேண்டியவர்கள் தாமதமாக வருவதால் கூட்டநெரிசல் அதிகமாக உள்ளது. காலைநேரம் நோயாளிகள் கூட்டநெரிசிலில் நீண்ட நின்று கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தற்போது நேரம் 8. 30 இதுவரையும் ஆய்வக ஊழியர்கள் வரவில்லை. எனவே காலதாமதமாக வரும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி உடுமலைஒன்றிய கமிட்டி சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி உள்ளனர்