திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வடபூதனம் பெரிய வாளவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரும்பில் நோய் தாக்குதல் இருந்த காரணத்தால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள். அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் ஜோதிவேல் தலைமையிலான குழுவினர் விவசாய நிலங்களை ஆய்வு செய்தனர். உடன் வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி, சர்க்கரை ஆலை தொழிலாளர் நல அலுவலர் பிச்சை கனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.