திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகராட்சி அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் தமிழ்நாடு முழுவதும் 9800 சமையல் உதவியாளர், 63 ஆயிரம் சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களை நிரப்பக் கோரியும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் எலிசபெத், ஒன்றிய செயலாளர் ஆனந்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட இணை செயலாளர் வைரமுத்து, பொருளாளர் தங்கபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.