திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் நகராட்சி சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இங்குள்ள நடைபாதையில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இது குறித்து பொதுமக்கள் தரப்பில் புகார் அளித்த நிலையில், நகராட்சி ஆணையாளர் சரவணகுமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது தண்ணீர் தேங்குவதற்கு காரணம் குடிநீர் குழாயில் ஏற்பட்ட கசிவு என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். குடிநீர் கசிவை சரி செய்யுமாறு ஆணையாளர் உத்தரவிட்டார்.