திருப்பூர் மாவட்டம் உடுமலை தாராபுரம் மாநில நெடுஞ்சாலை மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பராமரிப்புள்ளது. இந்த நிலையில் தாஜ்ரோடு சந்திப்பு முதல் நகர எல்லை வரை இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. பருவ மழை காலத்தில் ரோட்டில் மழை நீர் சென்டர் மீடியன் மீது ஒட்டிச் செல்கிறது. இதனால் பல இடங்களில் மண் திட்டுகள் அதிகரித்து வந்த நிலைகள் உள்ளன. இன்று (டிசம்பர் 21) நெடுஞ்சாலைத்துறை சார்பில் மண் திட்டுகள் அகற்றும் பணி நடைபெற்றது.