உடுமலையில் படிப்பகம் திறப்பு அமைச்சர்கள் பங்கேற்பு

75பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை குட்டை திடலில் நாராயண கவி மணிமண்டபம் உள்ளது. குறிப்பு உதவி நூலகமான இங்கு உள்ள புத்தகங்களை படித்து குறிப்புகள் எடுப்பதற்காக போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் நாள்தோறும் வருகை தருகின்றனர். இட நெருக்கடி காரணமாக மாணவர்கள் தரையில் அமர்ந்து படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வளாகத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் படிப்பக கூடம் கட்டப்பட்டது. இந்த நிலையில் சில வருடங்களாக பயன்பாட்டுக்கு வரவில்லை. இதன் காரணமாக மாணவர்கள் அவதிக்கு உள்ளாகி வந்தனர் மேலும் பல்வேறு தரப்பினர் படிப்பகத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் இன்று மணிமண்டபத்தில் உள்ள படிப்பகம் திறக்கப்பட்டது இந்த நிகழ்வில் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் கடந்த சில வருடங்களாக காட்சி பொருளாக காணப்பட்ட படிப்பகம் இன்று திறக்கப்பட்டதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி