திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கொழுமம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இரவு தமிழக வெற்றி கழகம் திருப்பூர் தெற்கு மாவட்ட சார்பில் செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் திருமலை தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் திருமலை பேசும்பொழுது. தற்பொழுது தமிழக வெற்றி கழகத்தை பார்த்து தமிழகத்தில் திமுக அதிமுக கட்சிகள்
பயந்து உள்ளன
தளபதி உழைப்பவர்களுக்கு பதவிகள் போட்டு உள்ளார். ஜாதி பார்த்து பதவிகள் வழங்கப்பட்டு உள்ளது என பரப்பி வருவது பொய்யான தகவல் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தை அவரவிதமான வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் ஒவ்வொரு கிராமத்திலும் கொடிக்கம்பம் ஏற்ற வேண்டும் ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார் இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் பிரகாஷ் குமார் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட உடுமலை மற்றும் மடத்துக்குளம் தவிர்க்க கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்