திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது உடுமலை கால்வாய் தற்போழுது குப்பைகொட்டும் இடமாக மாற்றப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக மனு கொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகைப்படங்களுடன் கோட்டாட்சியரிடம் தெரிவித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.