திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சேர்ந்த விவேகானந்தா பள்ளி தாளாளர் மூர்த்தி அவர்களின்
மகள் காமாட்சி (28) பெங்களூருவில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று பெங்களூர் சின்னசாமி விளையாட்டு மைதானத்தில் ஆர் சி எப் பயணிகள் வெற்றி கொண்டாட்டத்தில் டிக்கெட் எடுத்து மைதானத்தில் அமர்ந்திருந்த போது எதிர்பாராத விதமாக மைதானத்தில் உள்ள மேடையில் பலர் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தனர் அப்போது மேடை உடைந்து விழுந்ததில் காமாட்சி மற்றவர்கள் மிதித்தில் உடல் நசுங்கி பலியானார். உயிரிழந்த காமாட்சிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை இதற்கிடையில் இவரது உடல் உடுமலை அருகே மை வாடி பகுதியில் உள்ள பள்ளிக்கு தற்போது உடல் வந்த உடன் பெற்றோர்கள் உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது இந்த நிலையில் பல்வேறு தரப்பினர் தற்பொழுது காமாட்சி தேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
உடுமலையை
சேர்ந்த இளம்பெண் பெங்களூரில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலியான நிலையில் உடலை பார்த்து உறவினர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது