திருப்பூர் மாவட்ட வேளாண் துணை இயக்குனர்
வேளாண் வணிகம் வழிகாட்டுதலின்படி உடுமலை உழவர் சந்தை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதன்படி விவசாயிகள் பெயரில் உள்ள நிலத்தின் சிட்டா அடங்கல் கிராம நிர்வாக அதிகாரி சான்று ஆதார் மற்றும் குடும்ப அட்டை நகல்கள் புகைப்படங்கள் 4 உடன் உழவர் சந்தை அலுவலகத்தை அணுகலாம் விண்ணப்பத்தின் பேரில் உரிய முறையில் வயல் ஆய்வு செய்து அடையாள அட்டை வழங்கப்படும் என உழவர் சந்தை அதிகாரி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்