திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் பிஏபி தொகுப்பு அணையில் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து காண்டூர் கால்வாய் வழியாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றது தற்பொழுது அணையின் நீர்மட்டம் 60 அடிக்கு 50 அடிக்கு மேல் உள்ளது மேலும் நீர்வரத்து 789 கன அடியாக உள்ள நிலையில் திருமூர்த்தி அணை பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மேலும் அணைப்பகுதியில் நீர் இருப்பு உள்ளதால் பாசனத்துக்கு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.