தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம்!!

64பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று தோட்டக்கலைத் துறை சார்பில் மாவட்ட அளவிலான கருத்தரங்கம் தனியார் மண்டபத்தில் நடைபெற்று கொண்டு இருந்த நிலையில் கருத்தரங்குக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால்
பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில்
ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது. திருப்பூர் மாவட்ட அளவிலான தோட்டக்கலை துறை சார்பில் இன்று கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது இதற்கு விவசாயிகள் சார்பில் கடும கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த
சில மாதங்களாகவே தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு எந்த ஒரு பலனும் இல்லை தமிழக அரசின் மானிய திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு
உரிய நேரத்தில் சென்றடையவில்லை மேலும் பயிர்கள் சேதமானால் இழப்பீடு தொகை வழங்குவதில் அலட்சியமாக உள்ளனர் குறிப்பாக தற்பொழுது உடுமலை குடிமங்கலம் மடத்துக்குளம் பகுதிகளில் தென்னை வாடல் நோய் அதிகளவு உள்ளது மேலும் விவசாயிகள் பயிர்களுக்கு பாதிப்பு என்று கூறினால் அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்திற்கு ஆய்வுக்கு வருவதில்லை எனவே சம்பந்தப்பட்ட தோட்டக் லை அதிகாரிகள் விவசாயிகள் பாதிப்பு என்று சொன்னால் கள ஆய்வுக்கு வரவேண்டும் என தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி