திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் மலைவாழ் மக்களுக்கு கடந்த 1984 ஆம் ஆண்டு 120 வீடுகள் அரசியல் கட்சித் தரப்பட்டது. இந்த நிலையில் தற்போழுது வீடுகள் போதிய பராமரிப்பு இல்லாமல் எந்த நேரத்திலும் இடிந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் ஆய்வு செய்து மலைவாழ் மக்களின் வீடுகளை புதுப்பித்து தர வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கி உள்ளனர்.