திருப்பூர் மாவட்டம் உடுமலையை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் கொண்டு காந்தி சதுக்கம் மேம்பாலம் பகுதியில் திடீரென நின்று விட்டது. இதனால் பொதுமக்கள் பரிதவித்து போனார்கள் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. பிறகு ஒரு வழியாக மாற்று பஸ்களை பிடித்து பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். பஸ்களில் பராமரிப்பு செய்வதற்கு அலட்சியம் காட்டுவது வேதனை அளிக்கிறது. ஒரு சிலர் செய்யும் தவறுகளால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். நாள்தோறும் இரவு பஸ்களில் முறையான பராமரிப்பு செய்ய வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும். ஆனால் இது போன்ற நிகழ்வு நடப்பதாக தெரிவதில்லை.
இதனால் தான் ஆங்காங்கே நின்று பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் மக்கள், நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், பச்சிளம் தாய்மார்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதன் காரணமாக அரசுக்கும் அவப்பெயர் ஏற்படும் சூழல் நிலவுகிறது. எனவே தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் உடுமலை கிளை மூலமாக இயக்கப்படுகின்ற அனைத்து அரசு பஸ்களையும் நாள்தோறும் முறையான பராமரிப்புக்கு உட்படுத்த வேண்டியது அவசியமாகும் என்று தெரிவித்தனர்.