உடுமலை அருகே கால்வாய் கரையோரம் பெண் சிசு!

9274பார்த்தது
உடுமலை அருகே கால்வாய் கரையோரம் பெண் சிசு!
உடுமலை அடுத்த எஸ். வி. புரம் வழியாக பிஏபி பகிர்மான கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் தற்போது 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் சென்று கொண்டு உள்ளது.

இந்த நிலையில் இன்று தொப்புள் கொடியுடன் கூடிய பெண் குழந்தை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இது குறித்த தகவல் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு விரைந்த உடுமலை போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை இறந்து பிறந்ததா? அல்லது பெண் குழந்தை என்பதால் கால்வாயில் வீசிவிட்டனரா? ஏதேனும் முறை தவறிய உறவுக்கு பிறந்ததா? பிஞ்சுக் குழந்தையை கால்வாயில் வீசிச்சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார் என்றும் தெரியவில்லை.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தொப்புள் கொடியுடன் கூடிய குழந்தையின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி