திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் பகுதியில் வண்டல் மண் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கிய நிலையில் தற்போது ஆரம்ப சுகாதார நிலையம் பின்புறம் வண்டல் மண் எடுத்து முடிந்த நிலையில் தற்பொழுது சுமார் 40 அடி ஆழத்தில் கிராவல் முறையான அனுமதி இல்லாமல் இரவு பகலாக எடுத்து வருகின்றனர் இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் இல்லை என்றால் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.