திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையத்துக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்து வருவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.