உடுமலை போக்குவரத்து பணிமனை முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

74பார்த்தது
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் தாராபுரம் கிளையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி சம்பவத்தன்று தாராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து மதுரைக்கு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இதில் டிரைவராக கணேசனும் கண்டக்டராக அருள்பிரகாஷ் என்பவரும் பணிபுரிந்தனர். இந்த நிலையில் மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் ஏற்பட்ட நிகழ்வில் தாராபுரம் கிளை டிரைவர் கணேசனை மதுரை அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் செருப்பால் அடித்ததாக தெரிகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து அனைத்து தொழிற் சங்கங்களை சேர்ந்த டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கிளை கழகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்றீ உடுமலை கிளை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அரசு பஸ் டிரைவரை தாக்கிய மேலாளரை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய செய்வதுடன் அவரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்,
வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினார்கள். இந்த நிகழ்வில் அனைத்து அதிமுக தொழிற்சங்கம் நிர்வாகிகள் சதீஷ்குமார் தங்கவேல் மகாலிங்கம் காடேஸ்வரர் மகேந்திரன் மற்றும் திமுக சிஐடியு உட்பட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி