திருப்பூர் மாவட்டம் உடுமலை கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (பிப்.5) காலை 11 மணியளவில் உடுமலை செயற்பொறியாளர் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் கீதா தலைமையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மின் நுகர்வோர் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.