திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகே சடைய கவுண்டன் புதூரில் பப்பாளி ஜூஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில்
எதிர்பாராத விதமாக இரண்டு தொழிலாளர்கள் பப்பாளி கழுவும் தொட்டியில் தவறி விழுந்து விழுந்து உயிரிழந்தனர். இந்த நிலையில் சம்பவ இடத்தில் உடுமலை டிஎஸ்பி நமச்சிவாயம் உடுமலை வட்டாட்சியர் கௌரிசங்கர் காவல் ஆய்வாளர் அருள் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது கழிவுநீர் தொட்டியில் உள்ள கெமிக்கல் நீரை அருந்தியதால் உயிர் இழப்பு ஏற்பட்டதா, கழிவு நீர் தொட்டியில் உள்ள மின் மோட்டார் மூலம் என் மின்கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.