திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையத்தில் இன்று (டிசம்பர் 26) இரு இளைஞர்கள் மது போதையில் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஆசாமியை பிடித்து புற காவல் நிலையத்தில் விட்டுச் சென்றார். உள்ளே இருந்த டிவி மற்றும் நாற்காலிகளை நாசப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவத்திடத்திற்கு வந்த காவல் துறையினர் அட்டகாசம் செய்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.