திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட உடுமலை மத்திய ஒன்றிய பகுதியில் திமுக சார்பில் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல. பத்மநாபன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். நிகழ்வில் கே. ஈஸ்வரசாமி எம். பி, தலைமை கழக பேச்சாளர்கள் கோவை சம்பத், பொள்ளாச்சி சித்திக் ஆகியோர் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை எடுத்து கூறினார்கள். அத்துடன் மும்மொழி கொள்கைக்கு எதிராகவும், தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகின்ற மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன உரை நிகழ்த்தினார்கள். மேலும் மும்மொழி கொள்கை ஆதரித்தால் மட்டும் நிதி தருவோம் என பாஜக அரசு மிரட்டி வருகின்றது பத்தாயிரம் கோடி வழங்கினாலும் மும்மொழி கொள்கையை ஆதரிக்க முடியாது இந்தியை திணிக்க முடியாது என பேசினர் நிகழ்வில் திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத் தலைவர் இரா. ஜெயராமகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மு. ஜெயக்குமார், உள்ளிட்ட ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.