திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளும் அரையாண்டு விடுமுறை முடிந்ததை அடுத்து இன்று வழக்கம் போல் திறக்கப்பட்டன. இந்த நிலையில் அரசு பாரதியார் நூற்றாண்டு பெண்கள் பள்ளியில் இன்று(ஜன.2) மூன்றாம் பருவத்திற்கான பாடப் புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.