உடுமலை திருப்பதி பெருமாள் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்!

2911பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளபாளையம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற
ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருப்பதி கோவிலில் ஒவ்வொரு சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு வெங்கடேச பெருமாளுக்கு இன்று தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று வெங்கடேச பெருமாளை வழிபட்டனர். உடுமலை மடத்துக்குளம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்களுக்கு லட்டு துளசி தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் வி ராமகிருஷ்ணன் அறங்காவலர் மற்றும் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி