திருப்பூர் மாவட்டம் உடுமலையின் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 1-ம் தேதி பூச்சொரிதல், நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு சமுதாயம் மற்றும் பொதுமக்கள் சார்பிலும் பல்வேறு விதமான வேண்டுதல்கள் மாரியம்மனுக்கு நாள்தோறும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று தேவாங்கர் சமூக நல மன்றத்தின் சார்பில் திருமஞ்சனம், சக்தி கலசம் எடுத்தல் மற்றும் அலகு போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊர்வலத்தில் பக்தர்கள் ரத்தம் சொட்ட சொட்ட நேர்த்திக்கடனாக கத்தி போட்டு வந்தனர் அப்போது தீர்த்தம் எடுத்து வந்த ஆண் பக்தருக்கு திடீரென சாமி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது முன்னதாக பூமாலை சந்தில் உள்ள சவுண்டம்மன் கோவிலில் இருந்து இதற்கான ஊர்வலம் தொடங்கியது. மங்கள வாத்தியத்துடன் தீர்த்த குடங்களுக்கு தலைமை தாங்கி சக்தி கலசம் செல்ல அதற்கு முன்பாக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் இரண்டு கைகள் மற்றும் முதுகில் அலகு போட்டபடி சென்றனர். ஊர்வலமானது சீனிவாசா வீதி, பசுபதி வீதி, தளிரோடு, பெரிய கடை வீதி வழியாக மாரியம்மன் கோவிலை அடைந்தது. அதன் பின்பு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சக்தி கலசமானது ஒற்றை வாழைப்பழத்தில் எந்த விதமான ஆதரவும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கியபடி கோவிலை சென்றது பக்தர்கள் பொதுமக்களை ஆச்சரியப்படுத்தியது