திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணைப்பகுதியில் கடந்த சில வருடங்களாக படகு சவாரி தொடங்கப்படாமல் இருந்த நிலையில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் இந்த நிலையில் தற்சமயம் ஒன்பது படகுகள் மற்றும் 40 லைப் ஜாக்கெட்டுகள் வாங்க டெண்டர் 4 லட்சத்து 98 ஆயிரத்து 800க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதன் மூலம் திருமூர்த்தி மலை வரும் சுற்றுலாப் பயணிகள் இனி மகிழ்ச்சியுடன் அணையில் படகு சவாரி செய்யலாம் என என்பது குறிப்பிடத்தக்கது