திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெதப்பம்பட்டியில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குடிமங்கலம் வடக்கு ஒன்றியம் இளைஞரணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வர சாமி பரிசுகள் வழங்கினார். குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் கிரி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.