திருப்பூர், உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் இன்று அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நகர செயலாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராஜேந்திரன் கலந்துகொண்டு அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் வாழ்கின்ற பட்டியல் இன மக்கள் முன்னேற்ற ஓரு பங்கு ஜனத்தொகை கொண்ட அருந்ததியர் சமூகத்திற்கு சமூக நீதி அடிப்படையில் 6 சதவீத இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க உறுதி ஏற்போம், சட்டமன்ற தேர்தலில் அருந்ததியர் சமூகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும், நாடாளுமன்ற தனித் தொகுதிகளில் குறைந்தபட்ச இரண்டு தொகுதிகளில் ஒதுக்கீடு செய்ய வேண்டும், அருந்ததியர் மீதான படுகொலைகளை திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்,
மேலும் இட ஒதுக்கீட்டுக்காக உயிர் தியாகம் செய்த நீலவேந்தன், ராணி மகேஸ்வரன் ஆகியோருக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும், திருப்பூரில் அம்பேத்கருக்கும் தந்தை பெரியாருக்கும் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என பேசினார். நிகழ்வில் நகர இளைஞரணி செயலாளர் பூபதி, மடத்துக்குளம் ஒன்றிய இளைஞரணி அசோக், குடிமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் சந்தோஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.