திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சார்பு நீதிமன்றம் , குற்றவியல் நீதிமன்றம், நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என ஐந்து நீதிமன்றங்கள் உள்ள நிலையில் கடந்த சில தினங்களாகவே பழனியை புதிய மாவட்டமாக உருவாக்கி உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியை பழனியுடன் இணைக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பழனி சார் ஆட்சியருக்கு வழங்கிய அறிக்கை வேகமாக வைரல் ஆகி வரும் நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடுமலை வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பில் மூன்று நாள் நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கறிஞர்கள் கூறும் பொழுது. திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சட்டமன்ற தொகுதி புதிய பழனி மாவட்டத்துடன் இணைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து மூன்று நாள் நீதிமன்ற பணிகளை உடுமலை வழக்கறிஞர் மன்றம் முடிவு செய்துள்ளனர் மேலும் தற்பொழுது உடுமலை மடத்துக்குளம் பகுதி நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை சார்ந்து இருக்க வேண்டிய நிலையில் பழனியுடன் இணைத்தால் மதுரை உயர்நீதிமன்றத்தை சார்ந்து இருக்க வேண்டும் , உட்பட பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது சில வருடங்களுக்கு திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சாதிக் பாட்ஷா முக்கிய கோரிக்கையான உடுமலையை தலைமையிடமாகக் கொண்டு உடுமலை குமணன் மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற என தெரிவித்தார்.