திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை இ-நாம் திட்டத்தின் கீழ் மறைமுக கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. நடைபெற்ற ஏலத்திற்கு உடுமலை, விளாமரத்துப்பட்டி, எஸ். வி. மில், புக்குளம், குறிச்சிக்கோட்டை, கொடிங்கியம், கப்பலாங்கரை, தளி, எலையமுத்தூர், பட்டுக்கோட்டை, மானுப்பட்டி, பணத்தம்பட்டி, கோவை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 53 விவசாயிகள் 150 மூட்டை அளவுள்ள 7 ஆயிரத்து 500 கிலோ கொப்பரையை கொண்டு வந்திருந்தனர். இதில் 10 வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர்.
அதன்படி முதல் தர கொப்பரை ரூ. 160 முதல் ரூ. 172.36 வரையிலும் 2-ம் தர கொப்பரை ரூ. 90.26 முதல் ரூ. 154.16 வரையில் ஏலம் போனது. இந்த தொகையானது விவசாயிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுவதால் இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் வருமானம் ஈட்ட முடிகிறது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு 9443962834 என்ற எண்ணில் விவசாயிகள் தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.