திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி நோன்பு சாட்டப்பட்டு ஏப்ரல் 17ஆம் தேதி தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் இடைப்பட்ட காலங்களில் குட்டைதிடல் பகுதியில் விளையாட்டு உபகரணங்கள் அமைக்க நாளை காலை 12 மணி அளவில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொது ஏலம் நடைபெறும் என வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.