திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெரியகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜ் நகரில் மின்கம்பத்தில் பூனை ஒன்று சிக்கித் தவித்தது. இது குறித்த தகவல் உடுமலை தீயணைப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி மின் கம்பத்திலிருந்து பூனையை பத்திரமாக மீட்டனர். மின் கம்பத்தில் ஏறிய பூனை மின்சாரம் தாக்கி விடுமோ என்று அச்சமடைந்து இறங்க முடியாமல் தவித்தது விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் பூனையை பத்திரமாக மீட்டு வெளியே விட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.