உடுமலை ரயில்வே மேம்பாலத்தில் கார், இருசக்கர வாகனம் மோதல்!

3335பார்த்தது
உடுமலை காந்தி சதுக்கம் பகுதியில் ரெயில்வே பாதையை கடந்து செல்லும் வகையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது. அதன் வழியாக திருமூர்த்திமலை, அமராவதி, கேரளா உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களுக்கு சரக்கு, பஸ், வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மேம்பாலத்தில் செல்கின்ற வாகன ஓட்டிகள் அதிவேகம் மற்றும் அத்துமீறலில் ஈடுபடுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்று மேம்பாலத்தில் எதிர் எதிராக வந்த காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் படுகாயம் அடைந்தார். அவரை வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையில் விபத்தால் ரயில்வே மேம்பாலம் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

தொடர்புடைய செய்தி