திருப்பூர் மாவட்டம்
உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாகடந்த ஏப்ரல் 1தேதி நோன்பு சாட்டுதல் மற்றும் பூச்செரிதலுடன் துவங்கியது இந்த நிலையில் எட்டாம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் 11ஆம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடைபெற்றது இந்த நிலையில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது இந்த நிலையில் தினமும் வெவ்வேறு விதமான வாகனத்தில் மாரியம்மன் ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் நிலையில் நேற்று இரவு கம்மவார் நாயூடு சமூகம் சார்பாக சிம்ம வாகனத்தில் அம்மன் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் பின்னர் மாரியம்மன் கோவிலில் இருந்து துவங்கிய திருவீதி உலா பொள்ளாச்சி ரோடு தளி ரோடு நெல்லுக்கடை வீதி மற்றும் கொல்லம் பட்டறை வழியாக மீண்டும் கோவிலில் நிறைவடைந்தது.
அம்மன் திருவீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்