உடுமலையில் போக்குவரத்து துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

62பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. குட்டை திடலில் தொடங்கிய இந்த கார் பேரணியை உடுமலை ஆர். டி. ஓ என். குமார் கொடியசைத்து தொடக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பேரணியானது தளிசாலை, பழனி சாலை, ராஜேந்திரா சாலை, கபூர் கான் வீதி, ராமசாமி நகர், எலைய முத்தூர் சாலை வழியாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அடைந்தது. அப்போது காரில் பயணிக்கும் நபர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுத்தப்பட்டது. முக்கியமாக சீட் பெல்ட் அணிந்து மிதமான வேகத்தில் மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு இல்லாமல் இயக்குவது குறித்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஜெயந்தி, எண்ணம் போல் அறக்கட்டளை நிறுவனர் எஸ். ஏ. ஐ. நெல்சன், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி