திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மின்சிக்கன வார விழாவை முன்னிட்டு உடுமலை மின் பகிர்மான வட்டம் உடுமலை கோட்டம் சார்பில் மின்சாரத்தை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மேற்பார்வை பொறியாளர் கீதா துவக்கி வைத்தார். செயற்பொறியாளர் மாணிக்கம், கோட்ட பொறியாளர் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் துவக்கிய பேரணி திருப்பூர் ரோடு தளிரோடு வழியாக வந்து குட்டைதிடலில் நிறைவு பெற்றது.