உடுமலை தேர்த்திருவிழா ஏலம் நாளை நடைபெறும் அறிவிப்பு

70பார்த்தது
உடுமலையில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா வருகின்ற ஏப்ரல் மாதம் 1-ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்க உள்ளது. விழாவை பொதுமக்கள் மகிழ்வுடன் கொண்டாடும் வகையில் குட்டை திடலில் ஆண்டு தோறும் பொழுது போக்கு உபகரணங்கள் அமைப்பது வழக்கமான நிகழ்வாகும். அப்போது ஏலத்தொகை அதிகமாக உள்ளதாக கூறி அதை குறைத்து தருமாறு கூறினார்கள். இதையடுத்து ஏலம் 2 முறை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மறுஏலம் நாளை 28-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணியளவில் நடைபெற உள்ளது. கடந்த வருடம் ரூ. 99 லட்சத்து 20 ஆயிரத்துக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

அதனுடன் 10 சதவீத கூடுதல் தொகையை சேர்த்து ஏலத்தொகை ரூ 1 கோடியே 9 லட்சத்து 12 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஆனால் ஏலத் தொகையை குறைக்காமல் ஏல தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் ஒப்பந்ததாரர்கள் ஏலம் எடுப்பார்களா என்ற சந்தேகம் நிலவுகிறது. ஒருவேளை அதே தொகைக்கு ஏலம் எடுத்தால் பொழுது போக்கு கட்டணங்கள் விலை அதிகரித்து பொதுமக்கள் தலையில் சுமை ஏறக்கூடும். இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவார்கள். எனவே அதிகாரிகள் பரிசீலனை செய்து ஏலத் தொகையை குறைத்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி