திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் ஆதித்தமிழர் பேரவை வழக்கறிஞர் அணி செயலாளர் பெரியார் தாசன் தலைமையில் நடைபெற்றது விழாவில் அரசு ஊழியர் கூட்டமைப்பு அருந்தமிழ் ஆசிரியர் பால்ராஜ் தொடக்க உரையாற்றினார். உடுமலை முற்போக்கு எழுத்தாளர் கூட்டமைப்பு தலைவர் வழக்கறிஞர் சாதிக் பாஷா முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி சிபிஎம் நகர செயலாளர் தண்டபாணி மாவட்ட பொருளாளர் தீண்டாமை ஓழிப்பு முன்னணி பஞ்சலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டு அம்பேத்கர் நாட்டு மக்களுக்கு செய்த நன்மைகள் மற்றும் திட்டங்களை விளக்கிக் கூறினர்