திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மாரியம்மன் கோவில் திருவிழா ஏப்ரல் 1-ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது இந்த நிலையில் ஏப்ரல் 17ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் நேற்று இரவு பக்தர்கள் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் பக்தர்கள் நேர்த்திகடனாக பறவை காவடி ஊர்வலம் நடைபெற்றது பேருந்து நிலையம் பகுதியில் துவங்கிய ஊர்வலம் பொள்ளாச்சி ரோடு தளிரோடு வழியாகச் சென்று கோவிலில் நிறைவடைந்தது இந்த நிகழ்வினை ஏராளமான மக்கள் கண்டு களித்தனர்