உடுமலையில் சொகுசு கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

76பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை
சாதிக் நகரில் வசிப்பவர் வில்லியம்ஸ் ஓய்வு பெற்ற ஆசிரியரான இவரும் இவரது மனைவியும் தங்களது சொகுசு காரில் தேவாலயத்துக்கு சென்று விட்டு தங்களது வீட்டுக்கு திரும்பிவந்து கொண்டு இருந்தனர் அப்பொழுது இவர்கள் ஓட்டி வந்த சொகுசு கார் திருப்பூர் சாலை சந்திப்பை வந்தடைந்த போது திடீரென முன்புறத்தில் இஞ்சின் அமைந்துள்ள பகுதியில்இருந்து புகை வந்துள்ளது இதனைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் சாலை என்பதால் வில்லியம்சன் வாகனத்தை அருகில் உள்ள சிறிய ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு திருப்பினார் இதன் பின் தம்பதி இருவரும் காரில் இருந்து கீழே இறங்கி தப்பிவிட்டனர் இன்ஜின் முழுவதும் தீப்பிடித்து கார் உட்புறம் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமானது. பிறகு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் காரில் பிடித்திருந்த தீயை கட்டுப்படுத்தினர் ஆனால் தீயணைப்பு துறை வீரர்கள் வருவதற்கு முன்பே கார் உட்புறம் மற்றும் இஞ்சின் பகுதி முழுவதும் எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து உடுமலை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இவர்கள் இந்த சொகுசு காரை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் வாங்கி உள்ளனர் புதிய கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி