திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும களைகட்டியுள்ளது தேவாலயங்கள் மின் விளக்குகளால் ஜொலிக்கின்றன.
கிறிஸ்துவர்களின் முக்கியமான பண்டிகை கிறிஸ்துமஸ் ஆகும். ஏசு கிறிஸ்துவின் பிறந்த நாளை கொண்டாடும் நாளாகவும், அன்பு, பகிர்வு, சகோதரத்துவம் ஆகிய பண்புகளை போதிக்கும், இந்த விழா உடுமலை பகுதிகளில் தற்போது களை கட்டியுள்ளது. டிச. , முதல் வாரம் முதலே, வீடுகளில் வண்ண விளக்குளால் ஒளிரும் ஸ்டார் அமைத்தும், குடில் கள் அமைத்தும், தேவாலயங்கள் சார்பில், வீடுகள் தோறும் சென்று பூபாளம் பாடி வாழ்த்துக்களை பரி மாறிக்கொள்ளும் நிகழ்ச்சி என கிறிஸ்துமஸ் விழா நடைப்பெற்று வருகிறது. சி. எஸ். ஐ. , இம்மானு
வேல் ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகளும் நடைப்பெற்று வருகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு, உடு மலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலுள்ள கிறிஸ்துவ தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக் கப்பட்டு ஜொலிக்கிறது. சிறப்பு ஆராதனை, பாடல் பவனி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.