திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கலை பண்பாட்டு துறை மாவட்ட அரசு இசைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது இங்கு குரலிசை வயலின் நாதஸ்வரம் தேவாரம் பரதம் தவில் மிருதங்கம் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் நடப்பு கல்வி ஆண்டில் 56 பேர் சேர்ந்துள்ளதாகவும் வரும் வாரங்களில் மொத்த எண்ணிக்கை 140 வரை வாய்ப்புள்ளதாக தலைமை ஆசிரியர் விடுத்துள்ள செய்தி குரூப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது