உடுமலையில் மளிகை கடையில் 3. 5லட்சம் திருட்டு!

72பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் அருகே நகராட்சி தினசரி சந்தையை ஒட்டியவாறு தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு அங்குள்ள மளிகை கடையின் மேற்கூரையை பிரித்து ஆசாமி ஒருவர் உள்ளே இறங்கி உள்ளார். பின்னர் கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த சுமார் ரூ 3. 50 ஆயிரம், செல்போன் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் சேமிப்பு கருவியையும் திருடிச் சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் காலையில் வழக்கம் போல் உரிமையாளர் கடைக்கு வந்துள்ளார். அப்போது கடையின் மேற்கூரை சேதம் அடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கல்லாப் பெட்டியை சோதனை செய்து போது அங்கிருந்த பணம், செல்போன் உள்ளிட்டவை திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த உடுமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் ரேகை பரிசோதனையும் கடையில் மேற்கொள்ளப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 2 மளிகை கடை மற்றும் ஒரு வீட்டில் திருட்டு போனது குறிப்பிடத்தக்கது. உடுமலை பகுதியில் நடைபெற்று வரும் தொடர் திருட்டுச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி