உடுமலையில் 24 மணி நேரமும் மது விற்பனை அமோகம்!

66பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பகுதியில் 8 அரசு மதுபான கடைகள் அருகில் முறைகேடாக இயங்கி வந்த மதுபானக்கூடங்கள் கடந்த
சில மாதங்களுக்கு முன் சீல் வைக்கப்பட்டன. இந்த நிலையில் தற்சமயம் மீண்டும் அனுமதி இல்லாமல் மதுபானக்கூடங்களில் மூலம் 24 மணி நேரமும் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றது குறிப்பாக அனுஷம் திரையரங்கம் பின்புறம் உள்ள அரசு மதுபான கடையில் 2021 இல் மதுபான கூடம் சீல் வைக்கப்பட்ட நிலையில் தற்பொழுது மீண்டும் திறக்கப்பட்டு மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது முறைகேடாக மது விற்பனை நடைபெறுவது குறித்து உளவு துறை , காவல்துறைக்குக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர் எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்

தொடர்புடைய செய்தி